ஹாவேரி

பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா சவால் விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில்.

“மகாராஷ்டிராவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கர்நாடகா மற்றும் மராட்டியத்தில் மிரட்டி பணம் பறிக்கப்படுகிறது. கர்நாடகாவில் உள்ள மதுபானக் கடைகளில் 700 கோடி ரூபாய் அளவுக்கு காங்கிரஸ் கட்சியினர் மிரட்டி பணம் பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது”

எனக்குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளிக்கும் விதமா ஹாவேரி மாவட்டம் ஷிக்கானில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் சித்தராமையா,

”பிரதமர் இந்த அளவுக்கு பொய் பேசுவது ஆச்சரியம் அளிக்கிறது. சுதந்திர இந்திய வரலாற்றில் இவ்வளவு பொய் கூறும் பிரதமரை நாடு கண்டதில்லை.

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு அனுப்பவும், இடைத்தேர்தலுக்கு செலவிடவும் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி கலால் துறை மூலம் ரூ.700 கோடி வசூலித்துள்ளதாக மராட்டியத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி தெரிவித்தார்.

அவர் தனது குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன். நிரூபிக்காவிட்டால் நீங்கள் ஓய்வு பெறவேண்டும். இது நான் அவருக்கு விடுக்கும் சவால்.

என உரையாற்றியுள்ளார்.