மாஸ்கோ
சைபீரியாவின் உயிர் காட்சி சாலை ஒன்றில் கரடி ஜோசியத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெல்வார் எனத் தெரிய வந்துள்ளது.
சைபீரியா எனது ரஷ்ய கூட்டமைப்பின் பகுதி ஆகும். இது முன்பு சோவியத் யூனியன் பகுதியில் ஒரு பகுதியாக இருந்தது. இந்த பகுதியில் உள்ள உயிர் காட்சி சாலையில் அமெரிக்க அதிபர் குறித்த ஆரூடம் ஒன்று கரடி மூலம் நடத்தப்பட்டுள்ளது.
இது கிட்டத்தட்ட சீட்டு குலுக்கி போட்டு அதில் ஒன்றை எடுப்பது போன்றதாகும். இங்கு சீட்டுக்கு பதில் வேட்பாளர் இருவரின் படத்தையும் தர்பூசனி பழத்தில் வரைந்து வைக்கின்றனர். இந்த உயிர் காட்சி சாலையில் உள்ள புயன் என்னும் கரடி அதில் ஒன்றைத் தேர்வு செய்கிறது.
அவ்வாறு டிரம்ப் உருவம் வரைந்த பழத்தையும் ஜோ பிடன் உருவம் வரைந்த பழத்தையும் வைத்த போது புயன் என்னும் அந்த ஆண் கரடி ஜோ பிடன் படம் வரைந்த பழத்தைத் தேர்வு செய்து சாப்பிட்டுள்ளது. இதன் மூலம் ஜோ பிடன் வெல்வார் எனக் கூறுகின்றனர்.
ஏற்கனவே முந்தைய தேர்தலில் இந்த கரடி டிரம்ப் வெற்றி பெறுவார் எனவும் ஹிலாரி தோற்பார் எனவும் ஆரூடம் கூறி உள்ளது. இதே முறையில் ஒரு சிறுத்தைப் புலியை வைத்தும் ஆரூடம் பார்க்கப்பட்டு அதிலும் ஜோ பிடன் வெல்வார் என தெரிய வந்துள்ளது.
[youtube https://www.youtube.com/watch?v=Bh_TTdPsbTM]