அனுபவமுள்ள வழக்கறிஞர்களை சீனியர் வழக்கறிஞர்கள் என்று அறிவிப்பதில் நேர்மையையும் வெளிப்படை தன்மையும் வேண்டும் என்று இந்திரா ஜெய்சிங் என்ற வழக்கறிஞரால் தொடரப்பட்ட பொதுநல வழக்கு தொடர்பாக கடந்த வெள்ளியன்று டெல்லி உச்ச நீதிமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது வழக்கறிஞர்கள் ஒருவருக்கொருவர் கட்டுப்பாடின்றி உரக்க கத்தி விவாதம் படியால் தலைமை நீதிபதி கோபமடைந்து அவர்களை கடுமையாக எச்சரித்தார்.
வழக்கறிஞர்கள் உரத்த சத்தமிட்டு களேபரம் செய்ததை பார்த்துக்கொண்டிருந்த தலைமை நீதிபதி டி.எஸ் தாகூர் ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து “பேச்சை நிறுத்துங்கள்! இல்லையேல் வெளியே தூக்கி எறியப்படுவீர்கள், இதென்ன கோர்ட்டா, இல்லை மீன் மார்கெட்டா? நீதி மன்றத்துக்கென்று ஒரு உன்னத மரபு இருக்கிறெதென்றும், இங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் உங்களுக்கு தெரியாதா? இதுகூட தெரியாத நீங்கள் சீனியர் பதவி வேண்டும் என்று கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது?” என்று மிக காட்டமாக கேள்வி எழுப்பினார்.
அதை தொடர்ந்து நடந்த விவாதத்தில் சீனியர் வழக்கறிஞர்களை தேர்ந்தெடுப்பதில் வெளிப்படையான மரபுகள் பின்பற்றப்படுவதில்லை. இதில் ஒரு சில மூத்த வழக்கறிஞர்களின் ஏகபோக உரிமைகளே நிலைநாட்டப்படுகிறது. கடுமையான பாரபட்சங்கள் காட்டப்படுகிறது என்று இந்திரா ஜெய்சிங் தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார்