புதுடெல்லி:

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகமும் தகவல் அறியும் உரிமை சட்டத்துக்குள் வருமா? என்பது குறித்த அப்பீல் வழக்கை உச்ச நீதிமன்றம் விரைவில் விசாரிக்கவுள்ளது.


கடந் 2010-ம் ஆண்டு 3 நீதிபதிகள் கொண்ட டெல்லி உயர்நீதிமன்ற பெஞ்ச், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகமும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வரும் என்று தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்புக்கு எதிரான அப்பீல் வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச், இந்த வாரத்தில் விசாரிக்க இருக்கிறது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவகம் வெளிப்படையான சட்டத்தின் கீழ் வருமா? தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் வருமா? என்ற இரு கருத்துகளின் அடிப்படையில் விவாதம் நடைபெறவுள்ளது.

டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதித்தபின், இந்த வழக்கு கடந்த 9 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதே 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச், கடந்த ஆண்டில்ங ஆதார் சட்டம், இந்திய தண்டனைச் சட்டத்தின் 377 வது பிரிவை எதிர்த்த வழக்கு,  ஓரின சேர்க்கை வழக்கு, சபரிமலை போன்ற முக்கிய வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.