புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் சசி தரூர் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 திரும்ப பெறுமாறு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இடம் வலியுறுத்தியுள்ளார்.
இதைப்பற்றி சசிதரூர் தெரிவித்துள்ளதாவது: நாட்டின் சில மாநிலங்களில் அண்மையில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பேரழிவுகள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA)2020ஐ குறை மதிப்பிற்குட்படுத்தியதாக எச்சரித்துள்ளார்.
கேரளா, அசாம், பீகார் மற்றும் மகாராஷ்டிராவில் நாம் சமீபத்தில் பார்த்ததைப் போல நமது சுற்றுச்சூழல் ஆய்வு பேரழிவை தரும் இயற்கை நிகழ்வின் மூலம் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் தீவிரத்தன்மையை நாங்கள் கண்கூடாக கண்டுள்ளோம்.
மேலும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020ஐ திரும்ப பெறுமாறு வலியுறுத்தி சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
நாட்டின் சுற்றுச்சூழல் ஒழுங்குமுறை கட்டமைப்பில் EIA 2020 வரைவின் தாக்கங்களையும், சுற்றுச்சூழலில் அதன் தாக்கத்தையும் தவறாக சித்தரித்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்திருந்தார், காங்கிரஸ் தலைவர் சசி தரூர் இதனை எடுத்துக் காட்டி உடனடியாக EIA 2020 வரைவை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.