சென்னை:

சிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தங்கமங்கை கோமரி மாரிமுத்து, போட்டியின்போது அணிந்திருந்த ஷூ தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதற்கு விளக்கம் அளித்துள்ளார் கோமதி மாரிமுத்து.

தனது ஷூ குறித்து  சமூக வலைதளத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டு வருவதாகவும், அந்த ஷு தனது ‘அதிர்ஷ்ட ஷூ என்பதால் விரும்பி அணிந்தேன்’  என்று விளக்கம் அளித்துள்ளார்.

கத்தார் தலைநகர் தோகாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த கோமதி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

அவர் தமிழகம் திரும்பிய நிலையில், அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.  அப்பபோது, அவருக்கு திமுக ஏற்கனவே அறிவித்தபடி ரூ.10 லட்சம் நிதிஉதவி வழங்கப்பட்டது.

இதற்கிடையில், தோகாவில் நடைபெற்ற போட்டியின்போது, கோமதி அணிந்திருந்த ஷூ விவகாரம் பெரும் புயலை கிளப்பியது. அவரது வெற்றி, அரசியல் ரீதியாகவும், ஜாதிய ரீதியிலும் விமர்சிக்கப்பட்டு வந்தது.

தற்போது கர்நாடகாவில் வருமான வரித்துறையில் அரசாங்க ஊழியராக  பணியாற்றி வரும் கோமதி, கிழிந்த ஷு அணிந்து ஓட வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்தும்  கேள்வி எழும்பியது.

இந்த நிலையில், செய்தியாளர்கள் கோமதியிடம் கிழிந்த ஷு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்தவர்,  ‘நான் சிறிது கிழிந்த ஷூ தான் அணிந்திருந்தேன் என்று ஒத்துக்கொண்டவர்,  அந்த ஷூ எனக்கு மிகவும் அதிர்ஷ்டமானது. அதனால் தான் அதை நான் விரும்பி அணிந்திருந் தேன். 2 ஷூக்களின் நிறம் மாறி இருப்பது டிசைன் தான். வேறொன்றுமில்லை. சமூக வலை தளங்களில் அந்த படத்தை தவறாக சித்தரித்து பதிவிட்டுள்ளனர்’ என்று விளக்கமளித்தார்.