அமெரிக்க வலதுசாரி சிந்தனையாளரான சார்லி கிர்க் கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த நிகழ்வு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக டைலர் ராபின்சன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவரை கொன்றதாக கூறப்படும் குண்டு, சந்தேகநபர் டைலர் ராபின்சனுடன் தொடர்புடைய துப்பாக்கியிலிருந்து வந்ததா என்பதை ATF உறுதிப்படுத்த முடியவில்லை. இது பொருந்தவில்லை என்று அல்ல; உறுதி செய்ய முடியாத நிலை (inconclusive) என்று ராபின்சன் தரப்பு வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
இவ்வழக்கில் உள்ள 20,000 ஆதாரங்கள் மற்றும் சில பொருட்களில் பலரின் DNA இருப்பதை காரணமாகக் காட்டி, விசாரணையை தாமதப்படுத்த வேண்டும் என்று ராபின்சன் தரப்பு கோரியுள்ளது.
மேலும், போலீசார் வெளியிட்ட புகைப்படங்களில் குடும்பத் துப்பாக்கியை அடையாளம் கண்ட அவரது தந்தையே ராபின்சனை ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.
ராபின்சன் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், குண்டு-துப்பாக்கி தொடர்பான உறுதி இல்லாத நிலை, அவரது தரப்புக்கு சட்ட ரீதியாக ஒரு வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
[youtube-feed feed=1]