பெங்களூரு

முன்னாள் எம் பி பிரஜ்வல் ரேவண்ணா வழக்கு விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

இன்று மக்கள் பிரநிதிகளுக்காக சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் உயிரியல், உடல், அறிவியல், மொபைல், டிஜிட்டல் மற்றும் பிற தொடர்புடைய ஆதாரங்களும் அடங்கியுள்ளன. குற்றப்பத்திகை தாக்கல் செய்வதற்கு முன்பு நிபுணர்களின் கருத்தும் எடுக்கப்பட்டதாக எஸ்ஐடி தெரிவித்துள்ளது.

மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஹெச்.டி. ரேவண்ணாவின் மகனும் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல்வேறு பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். பிர்ஜ்வல் தொடா்பான ஆபாச காணொலிகள் அடங்கிய பென் டிரைவ் வெளியானதைத் தொடர்ந்து, ஏப்ரல் 28ஆம் தேதி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அவரது வீட்டில் பணிபுரிந்த 47 வயது பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதற்காக இந்த வழக்கு பதியப்பட்டது. பிறகு துப்பாக்கி முனையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக 44 வயது பெண் அளித்த புகாரின் பேரில் மே 1ஆம் தேதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பிரஜ்வல் மீது இரண்டாவது வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும் ஒரு பாலியல் வழக்கு மே 3ஆம் தேதி சிறப்புப் புலனாய்வுக் குழுவின் சார்பில் பிரஜ்வல் மீது பதிவு செய்யப்பட்டது.  இந்த வழக்கில் பிரஜ்வல் 60 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக இப்புகார் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  தற்போது இரண்டாயிரம் பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

பிரஜ்வல் வேலைக்காரியின் மகளை வீடியோ அழைப்பில் தனது ஆடைகளை கழற்றுமாறு வற்புறுத்தியுள்ளார். அத்துடன் தொலைபேசி அழைப்பின் போது, ​​ஆபாசமாக புகைப்படம் எடுத்து, ஆதாரங்க தகவல்களை அழித்ததும் தெரியவந்துள்ளது. புலனாய்வு குழு அசல் அறிக்கை மூலம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மீட்டெடுத்தது.

இதுவரை இந்த வழக்கில் நடத்தப்பட்ட விசாரணையில், பிரஜ்வால் பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வரலாறு, தாக்குதல்களைப் பதிவு செய்தல் மற்றும் அவர்களை அச்சுறுத்துவதற்காக காட்சிகளைப் பயன்படுத்திய அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தது என்று அதிகாரிகள் கூறி உள்ளனர்