85 வயதான ஓய்வுபெற்ற இருதயநோய் நிபுணர் டாக்டர் அசோகா ஜெயவீர, தனது நீண்ட தூர பயணத்திற்கு சைவ உணவை முன்கூட்டியே ஆர்டர் செய்திருந்த போதிலும், கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் அசைவ உணவு பரிமாறப்பட்டதால், நடுவானில் பரிதாபமாக உயிரிழந்தார்.
2023 ஜூன் 30 அன்று விமானத்தில் சென்றபோது இந்த சம்பவம் நடந்தது.
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த அசோகா ஜெயவீர அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் வசித்து வந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து இலங்கையின் கொழும்புவுக்கு சென்றார்.

சைவ உணவு உண்பவரான டாக்டர் ஜெயவீர, 15.5 மணி நேர விமானப் பயணத்திற்கு சைவ உணவு வேண்டும் என்று முன்கூட்டியே கூறியிருந்தார்.
இருப்பினும், அறிக்கைகளின்படி, ஒரு விமானப் பணிப்பெண் அவருக்கு சைவ உணவுகள் எதுவும் கிடைக்கவில்லை என்றும், அதற்கு பதிலாக வழக்கமான அசைவ உணவை வழங்கி, இறைச்சியைத் தவிர்த்துவிட்டு “சுற்றி உள்ள உணவை சாப்பிட” அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த அறிவுறுத்தலை ஏற்று சாப்பிட முயற்சிக்கும்போது, டாக்டர் ஜெயவீர மூச்சுத் திணறத் தொடங்கி சுயநினைவை இழந்தார். விமானக் குழுவினர் உதவ முயன்றனர், மேலும் மெட்அயரின் தொலைதூர மருத்துவ ஆலோசகர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டனர்.
இருந்தபோதிலும், அவரது உடல்நிலை மோசமடைந்தது, மேலும் விமானம் ஸ்காட்லாந்தின் எடின்பர்க்கிற்கு திருப்பி விடப்பட்டது, அங்கு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆகஸ்ட் 3, 2023 அன்று அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது, உணவு அல்லது திரவத்தை உள்ளிழுப்பதால் ஏற்பட்ட நுரையீரல் தொற்று காரணமாக அவர் இறந்ததாக மருத்துவ அறிக்கை கூறியுள்ளது.
இந்த நிலையில், டாக்டர் ஜெயவீராவின் மகன் சூர்யா ஜெயவீர, சமீபத்தில் கத்தார் ஏர்வேஸ் மீது தவறான மரண வழக்கைத் தாக்கல் செய்தார், உணவு சேவை மற்றும் விமானத்தில் மருத்துவ அலட்சியம் காட்டியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
கத்தார் ஏர்வேஸ் மற்றும் அமெரிக்கா இடையே விமானப் பொறுப்பை நிர்வகிக்கும் ஒரு சர்வதேச ஒப்பந்தமான மாண்ட்ரீல் சர்வதேச சட்டத்தின் கீழ் அதிகபட்சம் ரூ. 1.55 கோடி வரை இழப்பீடாக கோரலாம் என்ற நிலையில் சூர்யா ஜெயவீர, குறைந்தபட்ச இழப்பீடாக ரூ. 1.12 கோடி ($128,821) கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.