ராஞ்சி,
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள பீகார் முன்னாள் முதல்வர் லாலு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு சிறைச்சாலையில் தோட்ட பராமரிப்பு பணி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், லாலுவின் உதவியாளர்கள் இரண்டு பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அவர்கள் சிறையில் உள்ள லாலுவுக்கு உதவி செய்ய திட்டமிட்டு, அவரது உதவியாளர்கள் இரண்டு பேர் பொய் வழக்கு ஒன்றில், தாங்களாக முன்வந்து சரண்டர் ஆகி சிறைக்குள் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இது பீகாரில சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஊழல் வழக்கில் கடந்த 6-ந் தேதி லாலுவுக்கு 3½ ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.அதையடுத்து அவர்,. ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவர் சிறைக்கு செல்வதற்கு முன்பாகவே அவரது உதவியாளர் மற்றும் சமையல்காரர் ஆகியோர், வேறொரு பொய் குற்ற வழக்கில் சரண்டர் ஆகி சிறைக்குள் சென்றிருப்பதாகவும், அவர்கள் அங்கு லாலுவுக்கு பணிவிடை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இதை பீகாரில் ஆட்சி செய்து வரும் நிதிஷ்குமார் அரசு கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. அதற்கு விளக்கம் அளித்துள்ள லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி கட்சி,
லாலுவின் உதவியாளர்கள் இருவர் சிறைக்கு சென்றது தற்செயலாக நடைபெற்றது என்றும், அவர்களுக்கு எதிராக குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.