இது பிக் பாஸின் இறுதி வாரம் என்பதால் இதற்கு முன்பு எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் பலரும் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து இருக்கிறார்கள். அர்ச்சனா தொடங்கி அனிதா சம்பத் வரை முன்னாள் போட்டியாளர்கள் பலரும் ரீஎன்ட்ரி கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் ஷிவானி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் மட்டுமே தற்போது வரை பிக் பாஸுக்கு வராமல் இருந்தார்கள்.
#Day103 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் – வெள்ளி இரவு 10 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/ALQk6QOKnv
— Vijay Television (@vijaytelevision) January 15, 2021
இந்நிலையில் இன்று அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக இன்று ஷிவானி ஸ்டோர் ரூம் வழியாக வீட்டுக்குள் வந்திருக்கிறார்கள். பாயை சுற்றி அவரை அனுப்பி இருக்கிறார்கள். அவரை பார்த்ததும் மற்றவர்கள் சர்ப்ரைஸ் ஆகி இருக்கிறார்கள்.
#Day103 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் – வெள்ளி இரவு 10 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/3RRDzc56ER
— Vijay Television (@vijaytelevision) January 15, 2021
இந்நிலையில் தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில், ஷிவானி பாலாவிடம் நலம் விசாரிக்கிறார். ஏன் டல் ஆக இருக்கே ? உடம்பு சரியில்லையா என கேட்கிறார். அப்படி எல்லாம் இல்லை என பாலாஜி கூறிய நிலையில், வந்ததில் இருந்து டல் ஆக இருந்தது போல இருந்தது என்று ஷிவானி கூறுகிறார்.
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் மூன்றாவது புரோமோவில் ஷிவானி அதற்கான காரணத்தை கூறுகிறார். என்னவென்றால் ஆஜீத்திடம் ஒருமுறை பாலா ஷிவானியை பற்றி கூறிய சில வார்த்தைகள் தன்னை மிகவும் காயப்படுத்தி உள்ளதாகவும் கூறுகிறார். இதோ நீங்களே பாருங்கள்.