பிரதமர் நரேந்திர மோடி ரூ 3,600 கோடி மதிப்புள்ள சிவாஜி நினைவகத்திற்கு அரேபியக் கடலில் அடிக்கல் நாட்டிக் கிட்டத்தட்ட 29 நாட்களுக்குப் பிறகு, அகில் மகாராஷ்டிரா மச்சிமர் கிருதி சமிதி (AMMKS), வரவிருக்கும் மும்பை மற்றும் மாநகராட்சி தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) வேட்பாளர்களுக்கு மீனவ சமுதாயம் வாக்களிக்கமாட்டோம் என்றார்.
பிப்ரவரி 21 ம் தேதி அன்று செல்வந்தர்கள் வசிக்கும் பிரிஹான்மும்பை நகராட்சி கழகம் (பிஎம்சி) உட்பட 10 மாநகராட்சிகள், 25 ஜில்லா பரிஷத்துகள் மற்றும் 283 பஞ்சாயத்து சமிதிக்களில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
“வரவிருக்கும் நகராட்சி தேர்தல்களில் பாஜக வேட்பாளர்களுக்கு வாக்களிக்கமாட்டோம் என நாங்கள் (மீனவ சமூகத்தினர்) முடிவு செய்துள்ளோம். பிரதமர் மோடி மற்றும் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் பூமித்தாயாய் அவமானப்படுத்திவிட்டார்கள். பூமிபூஜைக்கு மட்டுமே சுமார் 25 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். சமுத்திரத்தில் நினைவகம் கட்டப்பட விடமாட்டோம்.
ற்படுத்தப்பட்ட வேட்பாளர்களுக்கு மட்டுமே நாங்கள் வாக்களிப்போம், ” என்று AMMKS தலைவர், தாமோதர் டன்டேல் கூறினார்.
தங்கள் பிரச்சினையைப் பெரிய அளவில் கொண்டு செல்ல அவர்கள் ஒரு அரசியல் கட்சியை துவங்கப் போவதாகவும் கூறினார். ” பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி.) சமூகம் ஒன்றாக இணைந்து, ஜனவரி 26 அன்று BOSS (பகுஜன் ஓ.பி.சி. சங்கர்ஷ் சேனா) என்று ஒரு கட்சியைத் தொடங்குவோம்” என்று அவர் கூறினார்.
மீனவர்கள் நினைவிடம் கட்டுவதற்கு எதிராக இல்லை என்று கூறியதோடு, வேறிடம் இல்லாததால், கட்டுவதற்கு தேர்வு செய்த பகுதியில் தான் மீன்களின் இனப்பெருக்கம் நடந்து கொண்டிருக்கிறது என்றும் கூறினார்.
“பல மீன்கள் இந்த வாழ்விடத்தை (பாறை பகுதியில்) விரும்பி, இங்கு இனப்பெருக்கம் செய்கின்றன. கிட்டத்தட்ட 40 வகையான நண்டுகள், ஷெல் மீன், கடல் விலங்குகள் அந்தப் பகுதியில் வசிக்கின்றன, அவ்விடத்தில் நினைவகம் உருவாக்கப் பயன்படுத்தப்பட்டால் இந்த இனங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுவிடும். சதுப்புநிலங்கள் மீன்களுக்கு இனப்பெருக்கத்திற்கும் உணவிற்கும் சிறந்தவை, ஆனால் இப்போது சதுப்புநிலங்களும் மிச்சம் இல்லை. ”
டன்டேல் தனது கூற்றை நிரூபிக்க, ஒரு கடல் சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் மனுதாரர்களுள் ஒருவருமான பிரதீப் படாடேவால் எடுக்கப்பட்ட புகைப்படங்களை காட்டினார். இந்தப் புகைப்படங்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது. 192-மீட்டர் உயரமான சிவாஜி சிலை, ராஜ் பவனிலிருந்து சுமார் 1.5 கி.மீ. மற்றும் அரபிக்கடலுக்குள் 3.5 கி.மீ. வரை திட்டமிடப்பட்டிருந்தது.
மகரிஷி தயானந்த கல்லூரியில், விலங்கியல் துறையில் உதவி பேராசிரியர் மற்றும் கடல் உயிரியல் ஆர்வலருமான டாக்டர் ரிஷிகேஷ் தால்வி, “நான் புரிந்து கொண்டதிலிருந்து, ஏற்கனவே கடலோரப் பகுதி மாசுபட்டிருக்கிறது. கடல் இனங்களுக்கு நாம் பல நல்ல பகுதிகளை இழந்து விட்டோம் “என்று கூறினார். தாதர், பாந்த்ரா கடற்கரை, உட்பட மும்பை கடலோரப் பகுதியில் பல்லுயிர் இருந்தது. சுற்றுலா மூலம் இந்த நினைவிடத்திற்கு வருவாய் வரலாம், ஆனால் அது பத்வர் பூங்காவில் வாழும் மீன்வளம் மற்றும் மீனவர்களுக்குக் கஷ்டத்தை உண்டாக்கும். ”
“சிவாஜி நினைவிடம் உட்பட அனைத்து நினைவிடங்களும் மும்பை ரேஸ் கோர்ஸில் கட்டப்பட வேண்டுமென உறுதியாகக் குரல் குடுப்போம்” என்றும் கூறினார்.
மேலும் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுபற்றிய பிரச்சினையை எழுப்பிய டன்டேல், சிவாஜி நினைவிடத்திற்கான மதிப்பிடப்பட்ட செலவு ரூ.3,600 கோடி வரை உயர்ந்துள்ளது, ஆனால் அரசாங்கம் அவ்வளவு பணத்தை எங்கிருந்து கொண்டு வரும் என்று கேட்டார்.
நினைவிடத்தைச் சுற்றி வேலை வாய்ப்புகள் உருவாக்கப் போவதாகவும் சுற்றுலா பயணிகளால் பயன்படுத்தப்படும் படகுகளை மீனவர்கள் வாங்குவதற்கு கடன் கொடுப்பதாகவும் கூறியுள்ள அரசாங்கத்தின் கூற்றைப் பற்றி கேட்டபோது, “1500 பெரிய படகுகள் மற்றும் 450 சிறிய படகுகள் உள்ளன, மேலும் அந்த இடத்தைச் சுற்றி வாழும் 25,000 க்கும் மேற்பட்ட மக்களின் வாழ்க்கை அதைச் சார்ந்து உள்ளது. 450 படகுகளும் சுற்றுலா பயணிகளுக்காகப் பயன்படுத்தப்படும்? அதற்கு ஐந்து அல்லது பத்து படகுகள் தான் தேவைப்படும், மீதமுள்ள படகுகள் என்னவாகும்? அதை வைத்து என்ன செய்வோம்? ” என்று டன்டேல் கேட்டார்.
2015 ல், அப்போதைய போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா, மாநில பொதுப்பணித்துறை துறை தலைமைப் பொறியாளருக்கு NOC தொடர்பாக கடிதம் எழுதியிருந்தார். அந்தப் பகுதியில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு வாய்ப்புள்ளது என்று அக்கடிதத்தில் தெரிவித்து இருந்தார். கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினைகளைப் பற்றி விவாதித்து, பல்வேறு நிறுவனங்களின் (போக்குவரத்து, பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை, கடலோரக் காவல்படை, தீயணைப்புப்படை, அரசு மருத்துவமனைகள்) குழு அமைக்கப்பட்டு, அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தப் பிறகு தான் செயல்முறைகள் தொடங்கப்பட வேண்டும் என்று NOC கொடுத்ததாக மரியா கூறினார். ஆனால் அந்தப் பிரச்சினைகள் ஆலோசிக்கப்படாமல் இருந்தால், NOC கருதப்படுமா என்று டன்டேல் கேட்டார்.