மும்பை

நேற்று நடந்த பாகிஸ்தான் ராணுவ துப்பாக்கி சூட்டை ஒட்டி சிவசேனா தனது கடும் கண்டனத்தை அரசுக்கு தெரிவித்துள்ளது.

நேற்று காஷ்மீர் எல்லைப் பகுதியில் ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நிகழ்த்தியதில் இந்திய ராணுவத்தினர் கொல்லப் பட்டனர்.  இது நாடெங்கும் அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது.   ராணுவத்தினர் மரணத்துக்கு அனைத்துத் தரப்பினரும் இரங்கல்க.ள் தெரிவித்து வருகின்றனர்.    அந்தப் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.   கடந்த 2017 ஆம் வருடம் 860 துப்பாக்கி சூடு நிகழ்வை பாக் ராணுவம் நடத்தி உள்ளது.

இது குறித்து சிவசேனா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரவுத், “பாகிஸ்தான் தனது ஏவுகணைகளை நமது ராணுவத்தினரை அழிக்க நேற்று பயன்படுத்தி உள்ளது.   ஆனால் நமது ஏவுகணைகள் காட்சிப் பொருள் மட்டும் தானா?  குடியரசு தின அணிவகுப்பில் வெளிநாட்டினரிடம் காட்டுவதற்கு மட்டும் தான் நமது நாட்டின் ஏவுகணைகள் உபயோகப் படுத்தப் படுகின்றதா?” என மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.