மும்பை

பால்கர் இடைத்தேர்தலில் வாக்களிக்க பாஜக பணம் கொடுப்பதாக தேர்தல் ஆணையத்திடம் சிவசேனா புகார் அளித்துள்ளது.

வரும் 28 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் பால்கர் மக்களைவை தொகுதியில் இடை தேர்தல் நடைபெறுகிறது.  பாஜகவின் முன்னாள் கூட்டணிக் கட்சியான சிவசேனா இந்த தேர்தலில் பாஜகவுக்கு எதிராக இயங்கி வருகிறது.

நேற்று சிவசேனா சட்டமன்ற உறுப்பினர் அமித் கோடா தேர்தல் ஆணையத்துக்கு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், “பாஜக இந்த தேர்தலில் வெற்றி பெற பல முறைகேடான செயல்கள் செய்து வருகிறது.   அதில் ஒன்றாக வாக்காளர்களுக்கு பாஜகவுக்கு வாக்களிக்க பண பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது.   இவ்வாறு நடப்பதை சிவசேனா தொண்டர்களும் பறக்கும் படையினரும் கண்டுபிடித்துள்ளனர்” என அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.