ஷீரடி ஸ்ரீ பைரவ சாய் பாபா கோவில், சென்னை, கீழ்கட்டளையில் அமைந்துள்ளது.
கலியுக பிரதட்சிய தெய்வமாக, மடிப்பாக்கம் ஸ்ரீ பைரவ சாய் திரு கோவிலில் அமர்ந்து மக்களுக்கு அருள் பாலித்து கொண்டிருக்கிறார் ஸ்ரீ ஷீர்டி பைரவசாயி பாபா.
சாய்பாபா வாழ்ந்த காலகட்டத்தில் அவரிடம் மக்கள் பாபா தங்களுக்கு பிறந்த நாள் விழா கொண்டாட ஆசை படுகிறோம் அதற்கு தாங்கள் உத்தரவு தர வேண்டுகிறோம் எனக் கேட்ட பொழுது பாபா புன்னகையுடன் ஸ்ரீ ராமநவமி தினத்தை எனது பிறந்தநாள் தினமாக அனுசரிக்கலாம் , எல்லோரையும் அந்த ஸ்ரீ ராமன் காக்கட்டும் எனக்கூறினார். அப்போதிலிருந்து இன்றுவரை ஸ்ரீ ராமநவமி தினம் பாபா பிறந்த நாள் தினமாக கொண்டாடப்படுகிறது.
ஒரு ஏழையின் கல்யாணத்துக்கு உதவுவதும், சிவபூஜை செய்யும் ஒருவருக்கு பூஜைக்கு வேண்டிய பூவோ, பழமோ, கற்பூரமோ ஏதாவது ஒன்றை கொடுத்தாலும் புண்ணியம் உண்டாகும் என்பது ஐதிகம். தேவேந்திரன், ஒரு நாள், தர்மராஜன் சபைக்கு வந்தான். எமதர்மன், தேவேந்திரனை உபசரித்து வரவேற்றான். அந்த சமயம், இரண்டு தேவ விமானங்கள் வந்தன. எமதர்மன், ஓடிப்போய் விமானத்திலிருந்தவரை வரவேற்று உபசரித்தான். ஒவ்வொரு விமானத்திலிருந்தும், ஒவ்வொரு புண்ணிய புருஷர் இறங்கினர். அவர்களை, எமதர்மன் உபசரித்ததை பார்த்த தேவேந்திரன், எமதர்மனைப் பார்த்து, இவர்கள் அப்படி என்ன புண்ணியம் செய்தனர்! என்று கேட்டான். அதற்கு எமதர்மன், இதோ இவர், சிரத்தையுடன் ஒரு கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்தவர். அந்த புண்ணியத்தினால், இவரை இங்கு உட்கார வைத்திருக்கிறேன். மற்றொருவரோ கோவில் கும்பாபிஷேகம், திருப்பணி போன்ற காரியங்களுக்கு உதவி செய்தவர்.. என்றான் எமதர்மன். தேவேந்திரன் ஆச்சரியப்பட்டு, கும்பாபிஷேகம் செய்தவரை விட, கும்பாபிஷேகதிற்கு உதவி செய்தவருக்குத்தான் அதிக புண்ணியம் என்பதை தெரிந்து கொண்டேன்… என்று சொல்லி, தேவலோகம் சென்றான்.
ஸ்ரீ சாய் பாபாவின் நூறாவது சமாதி தினத்தை ஒட்டி ஸ்ரீ பைரவ சாய் திரு கோவிலில் தொடர்ந்து நூறு நாட்கள் ஸ்ரீ ஷீர்டி சாய் பாபாவிற்கு பாத பூஜை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த பூஜை ஜூலை 12 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 19 ஆம் தேதி – ஷிரிடி சாய் பாபாவின் நூறாவது சமாதி தினத்தன்று விஜயதசமி சீறப்பு பூஜையுடன் முடிவடையும். இந்த பூஜையை கோயில் வளாகத்தில் பக்தர்கள் அவர்கள் கைகளால் ஸ்ரீ ஷீர்டி சாய் பாபாவிற்கு பாத பூஜை செய்வார்கள். ஒவொருநாளும் ஒரு பக்தர் இந்த பூஜைக்கு தேர்ந்து எடுக்கப்படுவார். பூஜைக்கு வேண்டிய அணைத்து சாமான்களும் மற்றும் ஷிரிடி யிலிருந்து வரவைக்கப்பட்ட ஸ்ரீ ஷிரிடி சாய் பாபாவின் பாதமும் கொடுக்கப்படுகிறது.
இதுமட்டுமின்றி, ஆண்டு தோறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவர்களுக்காகவும் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்காகவும் ஸ்ரீ சாய் ஹயக்ரீவ ஹோமமும் நடத்தப்படுகிறது.