டில்லி:
கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக உலககோப்பை தொடரில் இருந்து இந்திய கிரிக்கெட் டின் தொடக்க ஆட்டக்ககாரரான தவானுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் இந்த ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில், கடந்த மே 30 முதல் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதுவரை 15 போட்டிகள் இதுவரை முடிந்துள்ள நிலையில் மூன்று போட்டிகளில் வெற்றிபெற்று நியூசிலாந்து அணி முதல் இடத்திலும், ஆத்ரேலியா அணி இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஷிகர் தவான் அதிகபட்சமாக 117 ரன்கள் அடித்தார். இந்திய அணி வீரர்கள் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 352 ரன் எடுத்திருந்தது.
இந்த போட்டியின்போது, ஷிகர் தவானின் கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் ஆஸ்திரேலியா பேட்டிங்கின்போது பீல்டில் இறங்காமல் ஒய்வுவெடுத்து வந்தார்.
இந்த நிலையில், கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக தவான் அடுத்த போட்டிகளில் விளையாடமாட்டார் எனவும், அவருக்கு அடுத்த மூன்று வாரத்திற்கு ஓய்வு வழங்கப்படுவ தாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இன்னும் நடைபெற உள்ள போட்டிகளிலும் தவான் சிறப்பாக விளையாடுவர் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில் தவானுக்கு மூன்று வாரம் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கு அடுத்த போட்டி நியூசிலாந்துக்கு எதிராக வரும் வியாழக்கிழமை நாட்டிங்காமில் நடை பெற உள்ள நிலையில், தவான் நீக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதை பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை. அதுபோல தவானுக்கு பதில் யார் களமிறக்கப்போவது என்ற தகவலும் வெளியாகவில்லை.