துபாய்: ஐபிஎல் 2020 தொடரில், டெல்லி அணியின் ஷிகர் தவான் மொத்தம் 67 பவுண்டரிகளை அடித்து முதலிடத்தில் உள்ளார். இவர் மொத்தம் 17 போட்டிகளில் ஆடி இந்த சாதனையை செய்துள்ளார்.
இவருக்கடுத்து, மும்பை அணியின் சூர்யகுமார் 16 போட்டிகளில் ஆடி 61 பவுண்டரிகளை அடித்துள்ளார். மூன்றாவது இடத்திற்கு வருபவர் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல். இவர், மொத்தமாக 14 போட்டிகளில் ஆடி 58 பவுண்டரிகளை அடித்துள்ளார்.
நான்காமிடத்தில், 16 போட்டிகளில் ஆடி, 52 பவுண்டரிகளை அடித்துள்ளார் ஐதராபாத் அணியின் டேவிட் வார்னர். மேலும், 15 போட்டிகளில் ஆடி 51 பவுண்டரிகளை அடித்த பெங்களூரு அணியின் படிக்கல் ஐந்தாமிடத்தில் உள்ளார்.