செனனை:

டில்லி முன்னாள் முதல்வா் ஷீலா தீட்சித்தின்  கடந்த 20ந்தேதி மரணம் அடைந்த நிலையில், அவரது உடல் நேற்று அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரும், 15 ஆண்டுகாலம் டில்லி முதல்வராக தொடா்ந்து பதவி வகித்தவ ருமான ஷீலா தீட்சித், மாரடைப்பு காரணமாக கடந்த  சனிக்கிழமை மாலையில் காலமானாா். டில்லி போா்டிஸ் எஸ்காா்ட் மருத்துவமனையில் அவரது உயிா் பிரிந்தது. அவரது பொதுமக்கள் அஞ்சலிக்காக காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட நலையில், நேற்று மாலை  21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

ஷீலா தீட்சித் மறைவுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி  இரங்கல்  செய்தி வெளியிட்டு உள்ளார்.‘

அதில், இந்திய காங்கிரசின் மூத்த தலைவரும், முன்னாள் டில்லி முதலமைச்சருமான திருமதி. ஷீலா தீக்ஷித் அவர்கள் தனது 81வது வயதில் உடலக்குறைவுக் காரணமாக மரணமடைந்த செய்தி கேட்டு துயரும், உருக்கமும் அடைந்தேன்.

முதுபெரும் காங்கிரஸ் தலைவரின் மறைவு காங்கிரஸ் இயக்கத்திற்கு மட்டுமல்லாமல், நாட்டிற்கே பேரிழப்புகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.