தஞ்சாவூர்: திறந்தவெளி சிறைச்சாலைக்காக ஒதுக்கப்பட்ட அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடங்களை எழுப்பிய  சாஸ்த்ரா பல்கலைக்கழகம்மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முனைந்துள்ளது.  30ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஆக்கிரமிப்பு இடங்களில் கட்டப்பட்டுள்ள  கட்டிடங்களை இடிக்க நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருமலைசமுத்திரத்தில் இயங்கி வருகிறது சாஸ்த்ரா பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகமான, தஞ்சாவூர் திறந்த வெளி சிறைச்சாலைக்கு ஒதுக்கப்பட்ட சுமார் 31 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து 28 கட்டிடங்களை கட்டி உள்ளது. அரசு இடத்தை ஆக்கிரமித்துள்ள சாஸ்த்ரா பல்கலைக் கழகம் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் 30ஆண்டுகளை கடந்தும்  மாநில அரசு திணறி வருகிறது.

இந்த ஆக்கிரமிப்பை அகற்ற கடந்த 2018ம் ஆண்டு  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கான காலக்கெடுவும் கடந்த 2018 அக்டோபர் 3ம் தேதியுடன்  முடிவடைந்தது. ஆனால், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சேர்ந்து அப்போதைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து மாணவர்கள் படிக்க கூடிய நேரத்தில் கட்டிடங்கள் இடிக்கப்பட்டால் அவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும் என மனு அளித்தனர். அந்த மனு மீதான விளக்கத்தை அளிக்க அப்போது தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தற்போது சென்னை மாநகர ஆணையாக உள்ள  ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவை அரசு அமைத்தது. ஆனால், இந்த குழு ஒப்புக்கு சப்பாணியாகவேஇருந்து வந்தது. இதனால், ஆக்கிரமிப்பு கட்டிடங்களின் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை தொடர்ந்தது.

இந்த நிலையில், ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும், ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை மீட்பதில் தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சாஸ்த்ரா பல்கலைக்கழக்ம ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. அதன்படி, ஏற்கனவே பேடி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவை கலைத்து விட்டு, தமிழக அரசின் நில சீர்திருத்த இயக்குனர் ஜெயந்தி ஐஏஎஸ் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது ஆய்வு செய்ய வலியுறுத்தியது.

இந்த குழுவினர்,  கடந்த 22.10.21 அன்று தஞ்சை வந்து சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் எவ்வளவு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்தனர். அந்த ஆய்வு அறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, நேற்று ஞ்சை கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, கோட்டாட்சியர் ரஞ்சித் மற்றும் தஞ்சை வட்டாட்சியர் மணிகண்டன் ஆகியோர் கல்லூரி நிர்வாகத்திடம் கொடுத்தனர். மேலும், சாஸ்த்ரா பல்கலைக்கழக வளாகத்தில் ஆக்கிரமிப்பு குறித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அந்த நோட்டீசில், “ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு இடங்களில் கட்டப்பட்டுள்ள கட்டிங்களை  நான்கு வாரங்களுக்குள் (24.03.2022)  அகற்ற வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோட்டீஸ் தக்கிரமிப்பு அகற்றப்படாத பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், ஆக்கிரமிப்பு இடங்களில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் அகற்றப்பட்டு அதற்கான செலவுத் தொகை கல்லூரி நிர்வாகத்திடம் பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறையாவது ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை தமிழகஅரசு மீட்குமா? அல்லது எப்போதும்போல நடவடிக்கை என்ற பெயரில் கிடப்பில் போடுமா? என்பது இன்னும் ஒரு மாதத்தில் தெரிய வரும்.

30ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள தஞ்சாவூர் திறந்தவெளி சிறைச்சாலை! தமிழகஅரசின் கையாலாகதனம்

தஞ்சையில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 100 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு! சாஸ்த்ரா ஆக்கிரமித்துள்ள நிலம் மீட்கப்படுமா?