அமெரிக்க அதிபர் டிரம்ப் அக்டோபர் 1 முதல் பிராண்டட் அல்லது காப்புரிமை பெற்ற மருந்துகளின் இறக்குமதிக்கு 100 சதவீத வரியை அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உற்பத்தி ஆலையை அமைத்திருக்கும் நிறுவனங்களுக்கு இந்த வரி விதிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் இந்த அறிவிப்பை அடுத்து இந்திய பங்குச் சந்தையில் மருந்து நிறுவனங்களின் பங்குகள் 8% சரிவைச் சந்தித்தது.

லாரஸ் லேப்ஸ், பயோகான், சைடஸ் லைஃப் ஆகியவை அதிக நஷ்டமடைந்தன.
பொதுவான (ஜெனரிக்) மருந்துகளுக்கு இந்த வரி பொருந்தாது என்பதால் டாக்டர் ரெட்டீஸ், சன் பார்மா, லூபின், அரவிந்தோ போன்ற நிறுவனங்களின் பங்குகளில் பெரிய மாற்றம் இல்லை.
இந்திய நிறுவனங்கள் பெரும்பாலும் ஜெனரிக் மருந்துகளையே அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கின்றன.
ஆனால், ஜெனரிக் மருந்துகளின் லாபம் குறைவாக இருக்கும். விலை உயர்த்த முடியாவிட்டால், உற்பத்தி நிறுத்தப்படலாம்.
இது அமெரிக்காவில் மருந்து பற்றாக்குறையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
அதனால், ஜெனரிக் மருந்துகளுக்கு வரி விதிக்கப்பட வாய்ப்பு குறைவு என நிபுணர்கள் நம்புகின்றனர்.