சென்னை: திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியில், ஆட்சிஅதிகாரத்தில் பங்கு,அதிக தொகுதிகள் என குரல்கள் எழுந்துள்ள நிலையில், தொகுதி பங்கீடு குறித்து, திமுக எம்.பி. கனிமொழி இன்று ராகுல்காந்தியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்னும் 3 மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன. மேலும் கட்சிகளுக்கு இடையே கூட்டணி, தொகுதி பங்கிடு குறித்து பேச்சுவார்த்தைகளும் தொடருகின்றன. இதற்கிடையில், தொகுதிப் பங்கீடு, ஆட்சி அதிகாரம் தொடர்பாக தமிழ்நாடு காங்கிர கட்சியில் சலசலப்பு எழுந்துள்ளது. இதனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிதொடருமான என்பது கேள்விக்குறியானது. இதையடுத்து, இரு கட்சி தலைவர்களும், தொகுதி பங்கீடு, ஆட்சி அதிகாரம் போன்றவை குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது கட்சி நிர்வாகிகளுக்கு தடை போட்டுள்ளனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி இன்று சந்தித்து பேசவுள்ளார்.
ஏற்கனவே அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கிட்டத்திட்ட இறுதி செய்யப்பட்டு, பிரசாரத்தையும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக கூட்டணியில் ஏற்கனவே உள்ள கட்சிகள் தொடர்வதாக கூறி வந்தாலும், இந்த தேர்தலில் கூட்டணி குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள டெல்லி சென்றுள்ள கனிமொழி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை இன்று நேரில் சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொகுதிப் பங்கீடு, ஆட்சியில் பங்கு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் முதல்கட்ட ஆலோசனைகளை மேற்கொள்வார்கள் எனத் தெரிகின்றது.
[youtube-feed feed=1]