மும்பை
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தனது ராஜினாமாவைத் திரும்ப பெற்றுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி தேசிய அளவில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், சரத்பவார் ராஜினாமாவை ஏற்க முடியாது என்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவராக சரத்பவாரே தொடர வேண்டும் என வலியுறுத்தி மும்பையில் நடைபெற்ற அக்கட்சியின் உயர்மட்ட குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் தலைவர் பதவியில் இருந்து சரத்பவார் விலகுவதாக அறிவித்திருந்த நிலையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை சரத் பவார் திரும்பப் பெற்றுள்ளார்.கட்சியினர் பலரும் தனது ராஜினாமா முடிவை வாபஸ் வாங்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர் எனவும் அதனால் தனது ராஜினாமாவைத் திரும்பப் பெற்றுள்ளதாகவும் பவார் தெரிவித்துள்ளார்.