லைநகர் டெல்லியில் 7 மக்களவை தொகுதிகள் உள்ளன.காங்கிரசும், ஆம் ஆத்மி கட்சியும் இணைந்து போட்டியிட்டால்- ஏழையும் அள்ளலாம்,

ஆனால் கூட்டணிக்கு ஏழைரையாக இருக்கிறார்- டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித்.

15 வருடம் டெல்லியில் முதல்வராக இருந்தவர் அவர். அவரது நாற்காலியை ஆம் ஆத்மி பறித்த கோபத்தில்- அந்த கட்சியுடன் உறவு வேண்டாம் என்பது ஷீலாவின் பிடிவாதம்.

முன்னாள் டில்லி முதல்வர் ஷீலா திக்சித்

ராகுலுக்கு ஆம் ஆத்மியுடன்  கூட்டணி சேர வேண்டும் என்பதே விருப்பம்.

‘’ஆளுக்கு மூன்று இடங்களை பிரித்து கொண்டு ஒரு தொகுதியில்  பொது வேட்பாளரை நிறுத்தலாம்’’ என்பது ஆம் ஆத்மியின் திட்டம்.

இரண்டு கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தற்போது தீவிரமாக  இறங்கி உள்ளார்.

டெல்லியில் உள்ள தனது வீட்டில் இது தொடர்பாக காந்க்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன் ஆலோசனை நடத்தினார்.  ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி.சஞ்சய் சிங்கையையும் வீட்டுக்கு அழைத்து பேசினார்- பவார்.

உடன்பாட்டுக்கு ராகுல் ஒத்துக்கொண்டுள்ளதாக சஞ்சய் சிங்கிடம் சரத்பவார் தெரிவித்தார்.

முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில்-டெல்லி காங்கிரஸ் தனது கூட்டணியை முடிவு செய்யாதது பவாரை கவலை கொள்ளச்செய்துள்ளது.

முதலில் காங்கிரசுக்கு 3 தொகுதிகளை தருவதாக சொன்ன ஆம் ஆத்மி-இப்போது இரண்டு இடங்களை மட்டுமே தர முடியும் என்று கூறியுள்ளது.

பா.ஜ.க.வை தோற்கடிக்க- 2 இடங்களை  ஏற்க காங்கிரசும் தயாராகி விட்டது.

–பாப்பாங்குளம் பாரதி