மும்பை
வரும் மக்களவை தேர்தலில் தாம் மட்டுமே போட்டியிட உள்ளதாகவும் தமது வாரிசுகள் போட்டியிடவில்லை எனவும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் ஆவார் இவருடைய குடும்பத்தை சேர்ந்த அஜித் பவார், பார்த் பவார் மற்றும் ரோகித் பவார் ஆகியோரும் இந்த கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்து வருகின்றனர். தற்போது சரத் பவார் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். சரத் பவார் மகள் சுப்ரியா சுலே மக்களவை உறுப்பினராக உள்ளார்.
வரும் மக்களவை தேர்தலில் சரத் பவார் குடும்ப உறுப்பினர்களான அஜித் பவார் அல்லது பார்த் பவார் ஆகிய இருவரில் ஒருவர் போட்டியிட உள்ளதாக செய்திகள் வெளியாகின. அதே நேரத்தில் மற்ற தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் தம்மை மகாராஷ்டிராவின் மாதா தொகுதியில் இருந்து தம்மை போட்டியிட வற்புறுத்துவதாக சரத் பவார் தெரிவித்திருந்தார்.
நேற்று நடந்த ஒரு நிகழ்வில் சரத் பவாரிடம் செய்தியாளர்கள் அவர் வாரிசு அரசியல் செய்கிறாரா என கேள்விகள் எழுப்பினார்கள்.
அதற்கு சரத் பவார், ”வரும் மக்களவை தேர்தலில் எனது குடும்ப உறுப்பினர்களான பார்த் பவார், ரோகித் பவார் மற்றும் அஜித் பவார் உள்ளிட்ட யாரும் போட்டியிடப் போவதில்லை.” எனக் கூறி பேச்சை நிறுத்தினார்.
ஒரு சில நொடிகளுக்குப் பின் அவர், “ஆனால் இந்த மக்களவை தேர்தலில் சரத் பவார் ஆகிய நான் போட்டி இடுகிறேன்” என தெரிவித்தார்.
ஆனால் மக்கள் மத்தியில் இன்னும் மாவல் தொகுதியில் அஜித் பவாரின் மகனான பார்த் பவார் தேசியவாத காங்கிரஸ் சார்பில் நிறுத்தப் படலாம் என்னும் ஊகங்கள் உலவி வருகின்றன.