பெங்களூரு:
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் ஏலத்தில் ஷான் வாட்சனை ரூ.4 கோடிக்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
பெங்களூரில் இன்று காலை 10.30 மணி முதல் ஐபிஎல் 11வது சீசனுக்கான ஏலம் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஹர்பஜன்சிங், பிராவோ, டுபிளசியை தேர்வு செய்துள்ள நிலையில், தற்போது, ஆஸ்திரேலிய வீரரான ஷான் வாட்சனை சிஎஸ்கே ஏலத்தில் எடுத்துள்ளது.
ஏற்கனவே 2017 ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக ஷான் வாட்சன் விளையாடியது குறிப்பிடத்தக்கது.