மும்பை: ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்றும், உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி நிதியாண்டில் 9.5% ஆக சுருங்கக்கூடும் என்றும்
ரிசர்வ் வங்கி தலைவர் சக்திகாந்ததாஸ் தெரிவித்துள்ளார்.
மத்திய ரிசர்வ் வங்கி, 2020-ஆம் ஆண்டில், தன்னுடைய நான்காவது நிதிக்கொள்கைக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உறுப்பினர்களின் ஒருமித்த முடிவால் ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 4% ஆக தொடர்ந்து இருக்கும் என முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது.
வட்டி விகிதங்களில் மாற்றம் குறித்து இரு மாதங்களுக்கு ஒருமுறை நிதிக்கொள்கைக் குழு கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில், ரெப்போ வட்டி விகிதத்தை 4 சதவீகிதத்தில் இருந்து மாற்றாமல் இருக்க நிதிக்கொள்கைக் குழு ஒருமனதாக வாக்களித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்றும், குறைந்தபட்சம் நடப்பு நிதியாண்டு மற்றும் அடுத்த ஆண்டு தேவைப்படும் வரை நிதிக்கொள்கையின் இதே நிலைப்பாட்டை தொடர முடிவு செய்யப்பட்டு உள்ளது. ‘ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீகிதம் என்ற அளவிலும், ரிவர்ஸ் ரெப்போ ரேட் விகிதம் 3.35% என்ற அளவிலேயே தொடரும். இதனால் வங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது.
கொரோனா பேரிடா் காரணமாக இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி விகிதம் முன்னெப்போதும் இல்லாத மோசமான நிலைக்கு சென்றுள்ளது. பொதுமுடக்க அறிவிப்புகளால் பல துறைகள், பெரும்பாலான நிறுவனங்கள் முடங்கிப் போயின. நாட்டின் பொருளாதாரம் அவநம்பிக்கையில் இருந்து நம்பிக்கையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, ஏற்பட்டுள்ள விழ்ச்சி, பொருளாதாக வளர்ச்சிநடவடிக்கைகளை பாதித்துள்ளன.
இதுபோன்ற சூழல்களை கருத்தில் கொள்ளும்போது, நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி (-)9.5 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை சந்திக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
வரும் 2021 ஜனவரி-மார்ச் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என எதிர்பார்ப்பதாகவும், செப்டம்பர் மாதத்தில் உயர்ந்த பணவீக்க விகிதம் அக்டோபர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாத காலக்கட்டத்தில் படிப்படியாக குறையும் என நம்புவதாகவும், னால், 3வது மற்றும் 4வது காலாண்டில் இலக்கை நோக்கி பணவீக்கம் மெல்ல நகர கூடும் என்றும் எங்களுடைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன என்றும் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்.
ரெப்போ ரேட் என்பது ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு கொடுக்கும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும். ரெப்போ ரேட் குறையும்போது, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமும் குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.