மும்பை
நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2 ஆம் தேதி மும்பையில் இருந்து கோவாவுக்கு கார்டிலிய நிறுவத்தை சேர்ந்த ஒரு சொகுசுக் கப்பல் சுற்றுலா புறப்பட்டது. கப்பலில் என் சி பி (போதைப்பொருள் தடுப்புத் துறை) அதிகாரிகள் சாதாரண உடையில் பயணம் செய்துள்ளனர். அந்த கப்பலில் நடந்த கேளிக்கிஐ விருந்தில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேர் போதைப்பொருள் பயனபடுத்தியகா பிடிக்கப்பட்டனர்.
இவர்களை தொடர்ந்து இந்த வழக்கில் மேலும் சிலரும் கைது செய்யப்பட்டு மொத்தம் 17 பேர் கைதாகி உள்ளனர். இன்று வரை ஆர்யன் கான் உள்ளிட்டோர் என் சி பி காவலில் எடுக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த விசாரணை இன்றுடன் முடிவடைந்ததால் இவர்கள் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டனர்.
என்சிபி தரப்பில் ஆர்யன் கான் உள்ளிட்டோர 11 ஆம் தேதி வரை தங்கள் காவலில் வைத்து விசாரிக்க மனு அளிக்கப்பட்டது. இந்த மனு வை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அடுத்த 14 நாட்களுக்கு ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாளை ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற உள்ளது.