மும்பை:
பெண் போலீஸ் ஒருவருக்கு செய்யப்பட்ட பாலின மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்தவர் லலித்சால்வே. போலீஸ். இவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள உயர் அதிகாரிகளிடம் அனுமதி கோரினார். உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின் படி மாநில நிர்வாக தீர்பாயத்தை அணுகிய லலித்சால்வேவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
தற்போது அவருக்கு தற்போது முதற்கட்ட அறுவை சிகிச்சை நடந்துள்ளது. 6 மாதத்திற்கு பின்னர் 2ம் கட்ட அறுவை சிகிச்சை நடத்தப்படும் என டாக்டர் ரஜத்கபூர் தெரிவித்துள்ளார். இது குறித்து லலித்சால்வே கூறுகையில்,‘‘ 29 ஆண்டுகளாக பெண்ணாக வாழ்ந்து கொண்டிருந்தேன். தற்போது என்னுடைய புதிய வாழ்க்கையை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்’’ என்றார்.