கோவை: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின்பேரில், கோவையில் கிறிஸ்தவ மத போகர் ஜான் ஜெபராஜ் மீது கோவை காவல்துறையினர் போக்சோ வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், மதபோதகர் ஜான் ஜெபராஜ் தலைமறைவாகி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை காந்திபுரம் அருகே உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் மதபோதகராக பணியாற்றி வரும் ஜான் ஜெபராஜ்மீது பாலியல் புகார்கள் குவிந்துள்ளன. பெண்களிடம் அவர் அத்துமீறி செயல்படுவதாக சிலர் புகார்கள் கூறிய நிலையில், சிறுமிகளிடம் அவர் பாலியல் சேட்டை செய்துவந்ததும் தெரிய வந்துள்ளது.
மத போதகரான ஜான் ஜெபராஜ் (வயது 37). கோவை ஜி.என்.மில்ஸ் அருகேயுள்ள, உழைப்பாளர் காலனியைச் சேர்ந்தவர். இவர் காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் உள்ள, கிறிஸ்துவ ஜெபக் கூடத்தில், மதபோதகராக பணியாற்றி வருகிறார். அவ்வப்போத ஆடல் பாடலடன் கிறிஸ்தவ இசை நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறார். இவரச இசை நிகழ்ச்சியில் சிறுவர்கள் மூதல் பெரியோர்கள் வரை ஏராளமானோர் கலந்துகொள்வது வழக்கம்.
இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற தனியார் விழா ஒன்றில் ஜான் ஜெபராஜ் கலந்து கொண்டார். அப்போது அந்த விழாவுக்கு வந்திருந்த 17 வயது சிறுமி மற்றும் 14 வயது சிறுமி ஆகியோருக்கு ஜான்ஜெபராஜ் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதை வெளியே யாரிடமும் கூறக்கூடாது என அவர் மிரட்டியதால், அச்சிறுமிகளும் இதுதொடர்பாக வெளியே யாரிடமும் தெரிவிக்கவில்லை.
இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் அவர்களின் குடும்பத்தாரிடம் கூறிய நிலையில், அவர்கள்மூலம், கோவை சைல்டு லைன் பிரிவு அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் கோவை மாநகர காவல்துறையின், மத்தியப் பகுதி அனைத்து மகளிர் போலீஸாரிடம் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீஸார் போக்சோ பிரிவின் கீழ் மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது வழக்குப்பதிந்தனர்.
இதையறிந்த மதபோதகர் ஜான் ஜெபராஜ் தலைமறைவானார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து மாநகர காவல்துறையினர் கூறும்போது, “17 வயது சிறுமியை ஆசிரமத்தில் இருந்து தத்தெடுத்து, ஜான்ஜெபராஜின் உறவினர் வளர்த்து வருகிறார். 14 வயது சிறுமி அந்த உறவினர் வீட்டுக்கு அருகே வசித்து வருகிறார். இரு சிறுமிகளிடமும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.