கொல்கத்தா: மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் மீதுபாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேற்குவங்க மாநில பாஜக தலைவராக திலிப் கோஷ் மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் தேர்தலை சந்தித்த பாஜக சென்ற லோக்சபா தேர்தலில் 18 தொகுதிகளில் வென்று 40 சதவிகித வாக்குகளை அள்ளியது. வாங்கியது.

அண்மையில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராபவர்களை பார்த்து முதுகெலும்பு இல்லாத பிசாசுகள், ஓட்டுண்ணிகள் என்றும், நாய்களை சுட்டுக் கொல்வதை போல் சுட்டுத் தள்ளவேண்டும் என்று பேசி பரபரப்பு கிளப்பியவர்.

இப்போது அவர் மீது பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் பாஜக பேரணி அண்மையில் நடைபெற்றது. அந்த பேரணியில் பேசிய கோஷ் பாலியல் தொடர்பான கருத்துகளை பகிர்ந்தார் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இந் நிலையில் பேரணியில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் படூலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பாஜக தொழிலாளர்கள் என்னைக் கடித்தார்கள், வாய்மொழியாக துஷ்பிரயோகம் செய்தனர். திலீப் கோஷின் கேவலமான கருத்தைப் பற்றி நான் கேள்விப்பட்டேன்

அவர் பாலியல் கருத்துகளைக் கூறினார். கோஷின் கருத்து இந்த நாட்டில் பெண்கள் ஏன் பாதுகாப்பாக இல்லை என்பதைக் காட்டுகிறது என்று தெரிவித்து இருந்தார். அதன் மீது கோஷ் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

இதுபற்றி பேசிய மூத்த சிபிஎம் தலைவர் ஷாமிக் லஹிரி, அவருடைய கருத்துக்கள் அவரது மற்றும் அவரது கட்சியின் வக்கிர மனநிலையை பிரதிபலிக்கின்றன என்றார். காங்கிரஸ் மூத்த தலைவர் மனோஜ் சக்ரவர்த்தி, கோஷ் பேசுகையில், பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.