புதுடெல்லி: திருமணம் செய்துகொள்வதாக கூறி, பெண்ணை கற்பழித்து ஏமாற்றிய ஆம் ஆத்மி கட்சியின் பிரமுகர் முகேஷ் டோகாஸ் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
25 வயதுடைய பெண்மணி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர், பீகார் மாநிலத்தின் மோடிஹாரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைக் கூறி, வாக்குறுதியளித்து, கடந்த 2 ஆண்டுகளாக தன்னை பாலியல் சுரண்டல் செய்தார் என்று டெல்லி காவல்துறையில் புகாரளித்திருந்தார் அந்தப் பெண்.
இதனடிப்படையில் கைது செய்யப்பட்ட முகேஷ் டோகாஸ், தற்போது காவல்துறை கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டுள்ளார்.
தனது மனைவியை ஏற்கனவே இழந்த முகேஷ், தான் தனிமையில் வாடுவதாகவும், எனவே, அப்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகவும் கூறி, உடல்ரீதியாகப் பயன்படுத்தி வந்துள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.