தன்னை மூன்று பேர் கடத்திச் சென்று மாறி மாறி கற்பழித்ததாக புகார் கொடுத்த 20 வயது பெண் ஒரு விலைமாது எனவும் தனக்கு பணம் தராத வாடிக்கையாளர்கள் மீது உள்ள கோபத்தில்தான் அவர்கள் மீது பொய்புகார் கூறியிருக்கிறார் என்ற உண்மை பின்னர் வெளிவந்ததால் உச்சநீதிமன்றம் அவரை கண்டித்து இருக்கிறது.

judgement

பெங்களூருவைச் சேர்ந்த வீட்டுவேலை செய்யும் அந்தப் பெண்ணின் வழக்கு தொடக்கத்தில் அநீதி இழைக்கப்பட்ட ஏழைப்பெண் என்ற கோணத்தில் வழக்கு நீதியரசர்கள் பினாக்கி சந்திர கோஷ் மற்றும் அமித்தவ ராய் ஆகியோரால் கரிசனையுடன் விசாரிக்கப்பட்டது, அதன்பின்னர் அப்பெண்ணின் அறையில் உடனிருந்த மற்ற பெண்கள் இவர் பகல் நேரங்களில் வீட்டு வேலை செய்துவிட்டு இரவு நேரங்களில் பாலியல் தொழில் செய்பவர் என்ற உண்மையை போட்டு உடைத்தனர்.
இவரை தங்கள் ஆசைக்கு பயன்படுத்திவிட்டு பணம் தராமல் ஏமாற்றியவர்கள் மீது கற்பழிப்பு வழக்கு தொடுத்த விபரம் பின்பு தெரியவரவே எனவே இதை கற்பழிப்பு வழக்காக கருத முடியாது என்று நீதியரசர்கள் தீர்ப்பு வழங்கினர்.