கிருஷ்ணகிரி

ள்ளச் சந்தையில் ரெம்டெசிவர் மருந்தை விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சிறப்பு அதிகாரி பீலா ராஜேஷ் எச்சரித்துள்ளார்.

தற்போது கொரோனா நோயாளிகள் அதிகரிப்பால் மாநிலம் எங்கும் மருத்துவ ஆக்சிஜன், தடுப்பூசிகள், ரெம்டெசிவிர் மருந்து உள்ளிட்டவற்றுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.   கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக பீலா ராஜேஷ் பதவி வகித்து வருகிறார்.

நேற்று ஓசூர் அரசு மருத்துவமனையில் பீலா ராஜேஷ் ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது அவர் அங்கு ஆக்சிஜன், தடுப்பூசி, பிபிஇ கிட் ஆகியவற்றின் கையிருப்பு எவ்வளவு என நேரில்  பார்வையிட்டார்.   ஆய்வுக்குப் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசி உள்ளார்.

செய்தியாளர்களிடம் பீலா ராஜேஷ், “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா மரணங்களைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.   மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி கள்ளச்சந்தையில் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.