கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜக, திரிணமுல் காங்கிரசார் இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமுல் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. அண்மையில் மேற்கு வங்கம் சென்ற பாஜக தேசிய தலைவர் நட்டாவின் வாகனம் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந் நிலையில் புர்பா மெதினிபூர் மாவட்டம் ராம்நகர் சாலையில் உள்ள திரிணமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகம் அருகே பாஜக தொண்டர்கள் சென்றனர். அப்போது திரிணமுல் காங்கிரசை சேர்ந்த சிலருக்கும், பாஜகவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் இந்த சண்டை மோதலாக வெடித்தது. இந்த மோதலில் இருதரப்பிலும் பலர் படுகாயம் அடைந்தனர். உடனே போலீசார் இரு தரப்பினரையும் விலக்கி விட்டதால் பிரச்னை முடிவுக்கு வந்தது.
பாஜகவினர் தங்கள் கட்சி அலுவலகத்தை இடிக்க முயன்றதாக திரிணமுல் காங்கிரசார் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் இதனை பாஜக தொண்டர்கள் மறுத்துள்ளனர்.
[youtube-feed feed=1]