அரியானாவில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அறிவிப்பு

Must read

அரியானா:
ரியானாவில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக இருப்பதாலும், ஒரே நாளில் 125 பேர் அதற்கு பலியானதாலும், கட்டுப்பாட்டு நடவடிக்கையாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அரியானாவின் பல மாவட்டங்களில் ஏற்கனவே வார இறுதி நாட்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. மாநிலத்தில் தினசரி தொற்று எண்ணிக்கை 14 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

More articles

Latest article