பெல்கிரேட்: கொரோனா பரவலுக்கு மத்தியில், கிழக்கு ஐரோப்பிய நாடான செர்பியாவில் முதல் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. இதை உலகம் மிரட்சியுடன் நோக்கியது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய பனிப்போர் காலக்கட்டத்தில், கிழக்கு ஐரோப்பாவில் உருவான நாடுகளுள் ஒன்று செர்பியா. இந்த நாட்டிற்கென்று ரத்தம் தோய்ந்த வரலாறு உண்டு.
கொரோனா வைரஸ் ஐரோப்பியக் கண்டத்தையே பாடாய்படுத்தி வருகிறது. இந்நிலையில், செர்பிய நாட்டில் முதல் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
முகக்கவசம், சானிடைஸர் கட்டாயம் என்ற உத்தரவுக்கு மத்தியில் இத்தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. இத்தேர்தலில், மொத்தம் 60.6 லட்சம் வாக்காளர்கள் கலந்துகொண்டு வாக்களித்தனர். அதேசமயம், பலர் வைரஸ் தொற்று அச்சத்தால், தேர்தலைப் புறக்கணித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.