டெல்லி : செப்டம்பரில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.89 லட்சம் கோடி வசூலாகி உள்ளது; இது கடந்த ஆண்டு செப்டம்பரில் வசூலானதை  விட 9% அதிகரிப்பு என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ. 1.89 லட்சம் கோடி வரி வசூலாகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வசூலான தொகையை விட 9.1 சதவீதம் அதிகமாகும். 2024 செப்டம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.73 லட்சம் கோடியாக இருந்தது.

மத்தியஅரசு  அக்டோபர் 1, 2025 அன்று வெளியிடப்பட்ட   தரவுகளின்படி, கடந்த மாதம் ஜிஎஸ்டி  வசூல் ₹1.86 லட்சம் கோடியாக இருந்தது.   அதாவது ஆகஸ்ட் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1.86 லட்சம் கோடியாக இருந்தது, இது ஆகஸ்ட் 2024 இல் ரூ.1.75 லட்சம் கோடியிலிருந்து 6.5% அதிகமாகும். ஆகஸ்ட் மாதத்தில் நிகர வசூல் 10.7% அதிகரித்து ரூ.1.67 லட்சம் கோடியாக இருந்தது. ஜூலை மாதத்தில், அதிக ரீஃபண்ட் தொகை வழங்கப்பட்டதால் நிகர வருவாய் ரூ.1.68 லட்சம் கோடியாக மிதமானது. ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில், ஜிஎஸ்டி வருவாய் ரூ.10.04 லட்சம் கோடியாக இருந்தது, இது கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.9.13 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில்,  செப்டம்பர் 22 அன்று அமலுக்கு வந்த விகித பகுத்தறிவு வடிவத்தில் ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்கள் அமல்படுத்தரப்பட்டன. அதன்படி,  ஏற்கனவே,  5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகிதங்களில் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், அவை 5% மற்றும் 18% என இரு விகிதங்களாக குறைக்கப்பட்டன. இந்த ஜிஎஸ்டி சீா்திருத்தம் செய்துள்ள தா தாக்கம் அடுத்த மாத ஜிஎஸ்டி வசூலில் தெரியவரும்.