டில்லி:

‘‘செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி மூலம் ரூ.92 ஆயிரத்து 150 கோடி வசூலாகியுள்ளது’’ என மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது.

இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ‘‘ஜிஎஸ்டி மூலம் இந்தியா முழுவதும் 42.91 லட்சம் பேரிடமிருந்து ரூ.92 ஆயிரத்து 150 கோடி வசூலாகியுள்ளது. மத்திய ஜிஎஸ்டியாக ரூ.14 ஆயிரத்து 042 கோடி, மாநில ஜிஎஸ்டியாக ரூ.21 ஆயிரத்து 172 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.48 ஆயிரத்து 948 கோடி கிடைத்துள்ளது.

ஜிஎஸ்டி தாக்கலுக்காக அக்டோபர் 23ம் தேதி வரை 42.91 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் ரூ. 95,000 கோடியும், ஆகஸ்ட்டில் ரூ. 91,000 கோடியும் வசூலானது என்பது குறிப்பிடத்தக்கது.