ஒட்டாவா: கடந்த 6 மாதங்களில், கடந்த வெள்ளிக்கிழமைதான், கனடா நாட்டில் கொரோனாவால் யாரும் மரணமடையவில்லை என்ற நிலை ஏற்பட்டது.
கடைசியாக, கடந்த மார்ச் 15ம் தேதிதான், கொரோனாவால் மரணம் நேராத தேதியாக இருந்தது. அதன்பிறகு, 6 மாதங்கள் கழித்து கடந்த வெள்ளியன்றுதான் அந்த நிலை ஏற்பட்டுள்ளது.
கனடாவில், கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, மொத்தம் 60 லட்சம் மக்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதில், 2.1% பேருக்கு பாசிடிவ் முடிவு வெளியானது. கடந்த வெள்ளியன்று புதிதாக 702 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டாலும், புதிய மரணம் எதுவும் நிகழவில்லை.
கடந்த செப்டம்பர் 11ம் தேதி, கனடாவின் கியூபெக் மாகாணத்தில் 1 மரணம் பதிவானது. ஆனால், ஒண்டோரியாவில் முன்னதாக பதிவுசெய்யப்பட்ட மரணம் நீக்கப்பட்டது. கனடாவில் நிகழ்ந்துள்ள மொத்த கொரோனா மரணம் 9163 என்பதாக உள்ளது.