பெங்களூரு:

கர்நாடகா மாநிலத்திற்கு என்று தனியாக ஒரு கொடியை வடிவமைக்க 9 பேர் கொண்ட குழுவை சித்தராமையா தலைமையிலான அரசு அமைத்தது. இந்த குழு தனது பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

குழு உறுப்பினர் ஒருவர் கூறுகையில், ‘‘மஞ்சள், வெள்ளை, சிவப்பு என 2 நிறங்களில் இது இருக்க வேண்டும். மத்தியில் வெள்ளை நிறத்தில் மாநில அரசின் சின்னம் இடம் பெற வேண்டும்’’ என்று பரிந்துரை செய்திருப்பதாக தெரிவித்தார்.

இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ‘‘மாநிலத்திற்கு என்று தனி கொடி இருப்பதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் மறுப்பு தெரிவிக்கப்படவில்லை’’ என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.