மும்பை:
நாட்டின் பொருளாதார மந்த நிலை, கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, பங்குசந்தை கடுமையான வீழ்ச்ச்சியை சந்தித்துள்ளது. இன்று சுமார் 3200 புள்ளிகள் சரிந்து வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது.

நேற்று சென்செக்ஸ் 35,697 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. ஆனால், இன்று காலை 34,472 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. ஆனால், இன்றைய வர்த்தகம் மேலும் குறைந்து, தற்போது 32,750 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. அதுபோல, இன்று காலை முதலே சென்செக்ஸ் இறக்கத்தில்தான் வர்த்தகமாகி வருகிறது.
ஏற்கனவே 2020-ம் ஆண்டு, ஜனவரி 20-ம் தேதி அதிகபட்சமாக 42,273 புள்ளிகளைத் தொட்டது. ஆனால், அதன் பிறகு, இன்று மிகக்குறைந்த புள்ளியாக 32,493 புள்ளிகள் அளவே வர்த்தகமாககி உள்ளது. சுமார் 9,780 புள்ளிகள் சரிந்து உள்ளது.
நேற்று மாலை நிஃப்டி 10,458 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை நிஃப்டி 10,039 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி 9,540 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. நிஃப்டி தற்போது சுமாராக 917 புள்ளிகள் சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
மேலும் இன்றைய பங்கு வர்த்தகத்தில், சென்செக்ஸின் 30 பங்குகளில் ஒரு பங்கு கூட ஏற்றத்தில் வர்த்தகமாகவில்லை என்பது தெரிகிறது. மேலும், பங்கு சந்தையில் உள்ள 30 பங்குகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
பிஎஸ்இ-யில் 2,519 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 184 பங்குகள் மட்டுமே ஏற்றத்திலும், 2,233 பங்குகள் இறக்கத்திலும், 102 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. இதனால் பங்குசந்தையுயில் 11 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]