சென்னை: கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (வயது 100 ) மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

முதுபெரும் அரசியல்வாதியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வயது முதிர்வு காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். சமீபத்தில் 2025 டிசம்பரில் உடல்நலக்குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இநத் நிலையில், தற்போது மீண்டும் உடல்நலப்பாதிப்புகாரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிப்ரவரி 1ந்தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ல்லகண்ணுக்கு, மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நல்லகண்ணுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழுவின் கண்காணிப்பில், நல்லகண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
[youtube-feed feed=1]