சென்னை
எடப்பாடி பழனிச்சாமி அதிமுக எம் எல் ஏக்களுக்கு அளித்த விருந்தை செங்கோட்டையன் புறக்கணித்துள்ளார்.

அடுத்த ஆண்டு தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் தற்போதே சூடுபிடித்து விட்டன. இந்த தேர்தலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. இணைந்துள்ளடை சமீபத்தில் சென்னை வந்த பா.ஜ.க. மூத்த தலைவர் அமித்ஷா உறுதி செய்தார்.
இந்த. கூட்டணி அமைந்ததை அடுத்து, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் நேற்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விருந்து வழங்குகினார். விருந்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியௌ கடந்த சில நாட்களாக செங்கோட்டையன் தவிர்த்து வந்தார். ஈரோட்டில் கடந்த வாரம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய செங்கோட்டையன், “தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிறப்பாக ஆட்சி செய்தனர். அந்த வழியில் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் சிறப்பாக ஆட்சி செய்தார்” என்று புகழ்ந்து பேசினார்.
எனவே நேற்று எடப்பாடி பழனிசாமி வழங்கிய விருந்தில் செங்கோட்டையன் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி அளித்த விருந்தில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார். அரசியல் நோக்கர்கள் இடையே இது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.