
பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான சாண்டி மாஸ்டர் நடித்துவரும் 3:33 என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் டப்பிங் பணிகளும் முடிவடைந்து விட்டதாக கூறப்பட்டது.
நடன இயக்குநராக இருந்தவர் “3:33”, என்று பெயரிடப்பட்ட திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
இந்த படத்தில் பிக்பாஸ் போட்டியாளர்களான சரவணன், ரேஷ்மா உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள் என்பதும், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
3:33 திரைப்படத்தை பேம்பூ ட்ரீ புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் T.ஜீவிதா கிஷோர் தயாரிக்க இயக்குனர் நம்பிக்கை சந்துரு எழுதி இயக்கியுள்ளார். ஹர்ஷவர்தன் இசையமைத்துள்ளார்.
விரைவில் 3:33 திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் அடுத்ததாக சாண்டியின் புதிய மியூசிக் வீடியோவாக செம்ம போத பாடல் வருகிற அக்டோபர் 1-ஆம் தேதி மாலை 7 மணிக்கு வெளியாகிறது. இசையமைப்பாளர் ஓஃப்ரா இசையில், ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவில், இயக்குனர் கார்த்திக் இயக்கியுள்ளார். சாண்டி மாஸ்டரே நடன இயக்கம் செய்து நடித்துள்ள கலக்கலான இந்த செம்ம போத பாடலின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
[youtube-feed feed=1]Unveiling the first look of #ThinkOriginals next #SemmaBodha 🥂 ft @iamSandy_Off !
An @ofrooooo hangover!
Directed by @i_karthiik
🎤 @ofrooooo @HydeKarty
✍️ #Sago @HydeKarty @dop_harish @Sridevistylist @AttiCulture @wimvasu @ethicalsoulfilm pic.twitter.com/PojyqxFO0m— Think Music (@thinkmusicindia) September 29, 2021