குடிநீர் மற்றும் குளிர்பானங்களை அதிக பட்ச விலைக்கும் (எம்.ஆர்.பி) அதிகமாக விற்றால் சிறைத்தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் எச்சரித்துள்ளார்.

water

பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் மற்றும் பெப்ஸி, கோக் போன்ற குளிர்பானங்கள் ஆகிய பொருட்களை விமானநிலையம், மல்ட்டிப்ளக்ஸஸ், ஹோட்டல்கள் போன்ற இடங்களில் எம்.ஆர்,பிக்கும் அதிக விலையில் விற்பதாக தகவல்கள் வந்துள்ளன. இது சட்ட விரோதமான செயலாகும். இதை செய்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் சிறை தண்டனை உள்ளிட்ட கடுலையான தண்டனைகளை அனுபவிக்க நேரிடும். சமீபத்தில் குடிநீரை அதிக விலைக்கு விற்றதற்காக ஒரு மல்டிபிளக்ஸ் மீது மத்திய அரசின் நடவடிக்கை பாய்ந்தது.
அதே போல ஐ.எஸ்.ஐ முத்திரை இல்லாத பொருட்களை விற்பதும் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.