சிங்கப்பூரில் இந்த ஆண்டு இறுதிக்குள் டிரைவர் இல்லா தானியங்கி பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்து வலையமைப்பை வலுப்படுத்த அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுய-ஓட்டுநர் வாகனப் பயன்பாடுகளை அதிகரிப்பது குறித்து அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியோவ் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

இதையடுத்து சீனா சென்றுள்ள அவர், “2025 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் சிங்கப்பூரின் பொங்கோல் பகுதியில் சுய-ஓட்டுநர் ஷட்டில்கள் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சீன நிறுவனங்களுடன் இனைந்து செயல்படும் சிங்கப்பூரில் உள்ள பொதுப் போக்குவரத்து ஆபரேட்டர்கள் மற்றும் அமெரிக்க சுய-ஓட்டுநர் டாக்ஸி நிறுவனமான வேமோ உடன் விரைவில் பேச்சு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.