டெல்லி: தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் இருந்து ரூ.331 கோடி மதிப்பிலான பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ள தினத்தில் இருந்து தேர்தல் நடத்தை விதிகளும் நடைமுறைக்கு வந்துள்ளன.

இந் நிலையில், தேர்தல் நடைபெறவுள்ள தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் இருந்து ரூ.331 மதிப்பிலான பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

5 மாநிலங்களில் தமிழகத்தில் மட்டும் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.127.64 கோடி மதிப்புள்ள பணம், துணிமணிகள், நகைகள், பரிசு பொருட்கள், மதுபாட்டில்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேற்குவங்க மாநிலத்தில் 19.11 கோடி ரொக்கம் உள்பட ரூ.112.59 கோடி மதிப்பு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அசாமில் இருந்து 63.75 கோடி மதிப்புள்ள பணம், பொருட்களும், கேரளாவில் 21.77 கோடி மதிப்புள்ள பணம், பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. புதுச்சேரியில் 2.32 கோடியும், 2.85 கோடிக்கு பரிசு பொருட்கள் உள்பட 5.72 கோடி மதிப்புள்ள பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.