சென்னை:  நடிகை  விஜயலட்சுமி  குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உச்சநீதிமன்றத்தில்  நிபந்தனை யற்ற மன்னிப்பு கோரினார். இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

நடிகை விஜயலட்சுமியை காதலிப்தாக கூறி சீமான் பாலியல் வன்புணர்வு செய்தாகவும், பின்னர் அவரை கைவிட்டு விட்டகதாவும் விஜயலட்சுமி புகார் கூறியிருந்தார். அதாவது,    கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி குற்றம் சாட்டினார். ஆனால், பின்னர் 2012 ஆம் ஆண்டில் தனது புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார். பின்ன்ர 10ஆண்டுகளுக்கு பிறகு 2023 ஆம் ஆண்டில், மீண்டும் சீமான் மீது விஜயலட்சும்  புதிய புகாரை தாக்கல் செய்திருந்தார்.

இந்த புகாருக்கு எதிராக சீமான் வழக்கு தொடர்ந்து, அவரது குற்றச்சாட்டு உண்மை இல்லை என்றும், அதனால்,  வழக்கை ரத்து செய்யக்கோரினார்ர். ஆனால், அவரது மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், 12 வாரங்களுக்குள் விசாரணையை முடிக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி சீமான் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை  செப்.12 ஆம் தேதி அன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வழகை விசாரித்த நீதிபதிகள்,  “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ‘மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மன்னிப்பு கோரவில்லை என்றால் சீமானை கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும்” என்று உத்தரவிட்டிருந்தது.

இந்த விவகாரத்தில், “நீங்கள் குழந்தைகள் இல்லை. சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் எதிர்காலத்தில் நடிகை விஜயலட்சுமியைத் தொந்தரவு செய்யமாட்டேன் என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால் மட்டுமே சீமானுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்படும்” என்றும் நீதிபதிகள் தெரிவித் திருந்தனர்.

இந்த நிலையில், நடிகை தொடர்பான தனது அனைத்து கருத்துகளையும், பேட்டிகளையும் திரும்ப பெறுவதாக சீமான் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை இன்று தாக்கல் செய்தார். சீமான் மற்றும் நடிகை விஜயலட்சுமி இருவரும் பரஸ்பர மன்னிப்புக் கோரிய நிலையில், வழக்கை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.