ராஞ்சி:

ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள பழங்குடியின மக்கள் 10 ஆயிரம் பேர்  மீது, தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது, இதை ஊடகங்கள் மறைத்து வருகின்றன, ஊடகங்களை பாஜகவுக்கு விற்பனை செய்யப்பட்டவிட்டதோ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து ராகுல்காந்தி  தனது ‘டிவிட்டர்’ பக்கத்தில் பதிவேற்றியுள்ள பதிவில்,  ஜார்க்கண்ட் மாநிலத்தில், அரசின் அடக்குமுறையை எதிர்த்து போராடும், பழங்குடியினத்தை சேர்ந்த, 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மீது, தேச துரோக வழக்கை, ஜார்க்கண்ட் போலீசார் பதிவு செய்துள்ளனர்.

மாநில ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுபவர்கள் மீது எந்த அரசாங்கமும்  கடுமையான “தேசத்துரோக” சட்டத்தை பாய்ச்சாது, ஆனால், ஜார்கண்டில் 10ஆயிரம் ஆதிவாசிகள் மீது தேசத்துரோக சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது   நம் தேசத்தின் மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதுகுறித்து ஊடகங்கள்  புயலை எழுப்பியிருக்க வேண்டும்.

ஆனால், இது பற்றி எந்த ஊடகமும் செய்தி வெளியிடவில்லை.  “விற்றுவிட்ட” ஊடகங்கள் அதன் குரலை இழந்திருக்கலாம்; குடிமக்களாகிய நாம் வாங்க முடியுமா?

என்று கடுமையாக கேள்வி எழுப்பி உள்ளார்.