சோபியான், காஷ்மீர்
செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர்கள் மீது காஷ்மீர் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி சூடு நிகழ்த்தி உள்ளனர்.
நேற்று காலை பத்திரிகை புகைப்படக் கலைஞரான நிசார் உல் ஹக் என்பவருக்கு அவருடைய அதிகாரியிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் புல்வாமா பகுதியில் வசித்து வருபவர் ஆவார். அந்த தொலைபேசி அழைப்பில் அவர் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள சோபியான் பகுதியில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் துப்பாக்கி சண்டை நடப்பதால் அங்கு சென்று செய்தி சேகரிக்கக் கோரி அதிகாரி தெரிவித்தார்.
அதிகாரி வந்து அவரை அழைத்துச் சென்றுள்ளர். அவர்களுடன் மேலும் சில பத்திரிகையாளர்களும் சென்றுள்ளனர். துப்பாக்கி சண்டை நிகழ்ந்த இடத்தில் பாதுகாப்புப் படையினர் தடுப்பு ஒன்றை அமைத்திருந்தனர். தடுப்புக்கு அந்த பக்கத்தில் இருந்து தீவிரவாதிகள் கல்லெறி தாக்குதல் நடத்துக் கொண்டு இருந்துள்ளனர். இவர்களைக் கண்டதும் தீவிரவாதிகள் தாக்குதலை நிறுத்தி விட்டு அந்தப் பக்கம் செல்ல வழி விட்டுள்ளனர்.
இது குறித்து நிசார் ”நாங்கள் பாதுகாப்புப் படையினர் இருந்த பக்கம் சென்றோம். நாங்கள் பத்திரிகையாளர்கள் என்பதை தெரிவிக்க எங்கள் காமிராவை உயரப் பிடித்தபடி சென்றோம். ஆயினும் திடீரென எங்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி சூடு நிகழ்த்தினர். எங்களில் ஆறு பேர் அடிபட்டு கீழே விழுந்தனர்” என தெரிவித்துள்ளார்.
இந்த துப்பாக்கி சூட்டில் நிசார் மற்றும் அந்திராகி என்னும் செய்தியாளர்களுக்கு முகத்தில் அடிபட்டுள்ளது.. மேலும் மிர் புர்கான் மற்றும் ஜுனாய்த் குல்சார் ஆகிய இரு செய்தியாளர்களும் இந்த துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்துள்ள்னர். இதைத் தவிர உள்ளூர்வாசி ஒருவரும் காயம் அடைந்துள்ளார். அவர்களை தீவிரவாதிகள் புல்வாமா மாவட்ட மருத்துவமனையில் சேர்த்துள்ள்னர்.
நிசார் தாங்கள் துப்பாக்கி எதுவும் எடுத்துச் செல்லவில்லை எனினும் தங்களை நேரடியாக துப்பாக்கியால் பாதுகாப்புப் படையினர் சுட்டதாக தெரிவித்துள்ளார். அத்துடன் தங்களுக்கு உதவ வந்தவர்களையும் பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டதாகவும் அவர் கூறி உள்ளார்.
இது குறித்து பாதுகாப்புப் படையினர், “இந்த துப்பாக்கி சண்டியில் ஹிஜ்புல் முஜாகிதீன் இயக்கத்தினர் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். அதைத் தவிர ஐந்து பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் மூவர் முதலுதவிக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்” என பத்திரிகையாளர் என குறிப்பிடாமல் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த பத்திரிகையாளர்கள் மீதான துப்பாக்கி சூட்டுக்கு முன்னாள் காஷ்மிர் முதல்வர் ஒமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்